Monday 25 April 2016

நூற்றுக்கணக்கான இசை கலைஞர்களின் மத்தியில் மதன் கார்க்கியின் டூப்பாடூ வெளியிடப்பட்டது



உணவு, உடை மற்றும் இடம், எப்படி ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறதோ, அதே அளவிற்கு இசையும் இன்றைய மனித வாழ்வில் முக்கியத்துவமாகிவிட்டது. அப்படிப்பட்ட இசையை உருவாக்கும் இசை கலைஞர்களுக்கு, ஏற்ற மரியாதையையும், ஊதியத்தையும் பெற்று தர பாடுப்படும் இளம் முன்னணி பாடலாசிரியர் மதன் கார்க்கி. இவரும், இவருடைய குழுவினரும் இணைந்து உருவாக்கிய டூப்பாடூ என்னும் இசைத்தளம் நேற்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கவிபேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்பட்டது.

தாஜ் கிளப் ஹௌசில் நடந்த இந்த வெளியீட்டு விழாவில் புகழ் பெற்ற இசை கலைஞர்கள் சந்தோஷ் நாராயணன், SA ராஜ்குமார், தரண், கே, சத்யா மற்றும் வளர்ந்து வரும் இசை கலைஞர்கள் டார்லிங் 2 ரத்தன், ரமேஷ் விநாயகம், நட்ராஜ் ஷங்கர், பிரகாஷ் நிக்கி, சாதக பறவைகள் ஷங்கர், கார்த்திகேயா மூர்த்தி, குற்றம் கடிதல் ஷங்கர், LV கணேசன், கார்த்திக் ஆச்சார்யா, தன்ராஜ் மாணிக்கம், ரிஸ்வான் மற்றும் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், சுவேதா மோகன், சுச்சித்ரா, ரஞ்சித், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ஸ்ரீமதுமித்தா, ஷ்ரவன் ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.


மேலும், பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, விவேக் வேல் முருகன், விவேகா, குட்டி ரேவதி, காரவேல், பார்வதி மற்றும் GKB ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு, இந்தத் தளத்தின் மூலம் அவர்கள் பெறப் போகும் பயனை பற்றி பேசினர். தன்னுடைய வருகையால் அந்த இடத்தையே பிரகாசமாக்கிய சுருதி ஹாசன் ஆண்ட்ரியா ஜெர்மியாவும் விழாவுக்கு வந்து இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தனர்.அடிப்படையில் இசை கலைஞர்களான இவர்கள் இசை சங்கமத்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தது.அனைவரையும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல், RJ பாலாஜியின் அறிவாற்றல் கலந்த நகைச்சுவை பேச்சு அனைவரையும் கலகலவென சிரிக்க வைத்தது. மேலும் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன் மற்றும் வெங்கட் சோமசுந்தரம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது நூற்றுக்கணக்கான இசை கலைஞர்களின் மத்தியில் இந்த விழா அரங்கேறியது, டூப்பாடூவின் தனித்துவத்தை உணர்த்துகிறது.
தனது செந்தமிழ் வரிகளால் தேனை மக்களின் காதுகளில் ஊற்றும் கவிபேரரசு வைரமுத்து கூறுகையில், "என்னை போன்ற பாடலாசிரியர்களுக்கு, சினிமாவில் எழுதுவதை விட, இது போன்ற தனி பாடல்களுக்கு எழுதுவதில் தான் அதிக சுதந்திரம் உள்ளது. என் மகன் மதன் கார்க்கியின் இந்த முயற்சியை கண்டு நான் பெருமை கொள்கிறேன். என்னுடைய சார்பில், நூறு நாட்களில் நூறு பாடல்களை இந்த தளத்திற்காக எழுதி தருவேன்!" என்றார்.
தன்னுடைய படங்களில் பாடல்களுக்கும் , அதை படமாக்கும் விதத்துக்கும் மிகுந்த முன்னுரிமை கொடுக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தானே இயற்றி இசை அமைத்த பாடலை இங்கு வெளி இட்டார். அந்த பாடல் பதிவான சூழ்நிலையையும் அவர் குறிப்பிட்டு பேசியது அங்கு இருந்தோரை கவர்ந்தது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக தமிழ் சினி உலகின் பழம்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 'எங்கே உந்தன் ஹார்மோனியம்' என்னும் பிரத்யோக இசை ஆல்பம் மூலம் இந்த டூப்பாடூ தளம் வெளியீட்டு விழா துவங்கப்பட்டது. அவருக்கும் அவருடைய இசை கருவியான ஹர்மோனியத்திற்கும் உண்டான உறவை அழகாக எடுத்துரைப்பதே இந்த பாடல். அதுமட்டும் இல்லாமல், வாழ்க்கையில் சொற்கள், குரல் வளம், இசை கருவிகள் மற்றும் பேனா முனையால் உயர்ந்த அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என்பது குறிப்பிடப்பட்டது.. இசைத் துறையில் மேலே வர போராடி கொண்டிருக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த டூப்பாடூ ஓர் ஏணி படியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment