சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டத்தை பற்றி நான் தெரிந்து கொண்டதும் நான் மிகவும் வருந்தினேன் , மனசு வலித்தது , எல்லாருக்கும் நேரம் இருக்கு , எல்லாருக்கும் நேரம் வரும். கல்லூரி படிக்கும் போது நானும் எதுவும் செய்யமால் இருந்தேன் , ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம் தான் காரணம். இப்படத்தில் நான் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன்.
விழாவில் ஞானவேல் ராஜா பேசியது ; நான் சமீபத்தில் கேட்ட கதைகளிலேயே இப்படத்தின் கதை தான் மிகசிறந்தது எனலாம் , நான் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். 2 டி யும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இனைந்து தற்போது மிகச்சிறந்த பிரம்மாண்ட படைப்பை வெளிக்கொண்டுள்ளது என்றார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது ; நான் இப்படத்தில் இன்னும் பணியாற்றிக்கொண்டு இருப்பதால் என்னால் இப்படத்தை பற்றி பேச இயலாது. உங்கள் ஆதரவுக்கு நன்றி என்றார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
சூரியா சமந்தா , நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் k குமார் இயக்கத்தில் வெளிவரயுள்ள 24 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் சூர்யா , இயக்குனர் விக்ரம் குமார் , இசைப்புயல் A.R.ரகுமான், ஞானவேல் ராஜா , நித்யா மேனன் , சிவக்குமார் , கார்த்தி . கவிபேரரசு வைரமுத்து , சரண்யா பொன்வண்ணன் ,மதன் கார்க்கி .சின்மயி , இயக்குனர் ஹரி உள்ளிட்ட மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர் ...
விழாவில் இசைப்புயல் A.R. ரகுமான் இசையில் நித்யா மேனன் 24 படப் பாடலை தெலுங்கில் பாடினார்..இப்பாடல் அரங்கத்தில் இருந்தவர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது..
No comments:
Post a Comment