Thursday 20 August 2015

I owe a lot to lingusamy says Director Ravi Nandha Periyasamy on Jigina










As the screens across the state prepare themselves to glitter with 'Jigina' from 21 st August , Director Ravi Nandha Periyasamy  reveals a lot more on 'Jigina'.It was indeed a great gesture from my producer friend Thirai  Kadal  to come forward to produce this film.As we discussed upon the casting we discussed only one name for the male lead,and that was Vijay Vasanth. Such is his performance,every one who had seen the film keeps raving on his performance.The new face Sanyathara has been a revelation.She was a bundle of energy. I foresee a bright future for her. The biggest plus points  will be singam puli , Ravi Maria and  'Kumki' Ashwin The music is appreciated by one and all and it has become the crowd puller for this youth oriented film.We have discussed the false identity in the social media that breeds troubles. My technical team comprising Balaji Ranga the camera man,Music Director John Peters, Editor Gopi Krishna, were the back bone of this film.I am indebted to my friend and Producer and Director Lingusamy for coming forward to release 'Jigina' through his banner Thirupathy Pictures,through which 'Jigina' has got a glittering effect.It is not always the commercial factors that determine the value of the director but also the social commitment he or she has over the society that matters.It was Lingusamy, who watched the movie with the sound clap and became a first fan for this movie. 'Jigina' in my opinion will cater to all section of audience both in terms of entertainment and social awareness' concluded the ever energetic Ravi Nandha Periyasamy.


லிங்குசாமிக்கு நான் மிகவும் கடமைப்பட்டு உள்ளேன்- இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி.

தமிழ் நாட்டில்  உள்ள திரை அரங்குகள் 'ஜிகினா' படம் திரை இடப் படுவதன் மூலம் ஆகஸ்ட் 21 முதல் ஜொலிக்க உள்ளது.பெரிதும் எதிர் பார்க்கப் பட்டு வரும் இந்தப்படத்தின் இயக்குனர் ரவி நந்தா  பெரியசாமி கூறும் போது  'இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோடு , உடனடியாக படத்தை தொடங்கவும் செய்த என் நண்பரும் தயாரிப்பாளரும் ஆன திரைக் கடல் அவர்களுக்கு  என் மனமார்ந்த்த நன்றி.கதையை விவாதிக்க ஆரம்பித்த உடனே கதாநாயகனாக எங்கள் மனதில் தோன்றிய  முதல் பெயர் விஜய் வசந்த் தான்.படம் பார்த்தவர்கள் எல்லோரும் விஜய் வசந்த்தை மிகவும் பாராட்ட செய்வார்கள். புது முகம் சானியாதாரா மிகவும் துடிப்பானவர்.அவருக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கிறது.இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் என நான் கருதுவது 'கும்கி' அஷ்வின், சிங்கம் புலி, மற்றும் ரவி மரியா ஆகியோர். இன்னொரு சிறப்பு அம்சம் இசை என்பேன்.எல்லோரையும் பெரிய அளவுக்கு கவர்ந்து உள்ளது.என்னுடைய தொழில் நுட்ப சகாக்கள் ஒளிப்பதிவாளர்  பாலாஜி ரங்கா, இசை  அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ், பட தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா ஆகியோர் இந்தப்படத்தின் முதுகு எலும்பு போன்றவர்கள். 'ஜிகினா; படத்தை வெளி இட முன் வந்த எனது நண்பரும் இயக்குனருமான லிங்குசாமிக்கும் , அவரது சகோதரரும் என் நண்பருமான போஸுக்கும்  என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குனருக்கு வர்த்தக ரீதியான வெற்றி எவ்வளவு  அவசியமோ  அதே அளவுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும்  அவசியம். இந்த படத்தினை முதலில் பார்த்து கை தட்டிய லிங்குசாமி அவர்களே இந்த படத்தின் முதல் ரசிகர் , அந்த வகையில் 'ஜிகினா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம் 'என்று  உறுதிப்படக் கூறினார் ரவி நந்தா பெரியசாமி.     

No comments:

Post a Comment