Thursday 27 August 2015

Unakenna Venum Sollu








'Unakenna venum sollu ' a film much discussed for the intense content is also being discussed for the musical content.Young Siva Saravanan  originating  from a  popular band group is making his debut as a music director in 'Unakenna venum sollu.' Veteran of many independent albums this young talent is all excited about the big day of his audio launch. 'Of course , this is the biggest day of my life. I had dreamt this day from the age of seven.The unique genre of the film 'Horror and Sentiment' was challenging, and the acknowledgement through appreciation was my first installment of success.My inspiration is the inspiration of the Universe in music- Raja sir. The sounds he had created  as a composer in rerecording will be the bench mark to the musicians world over i will say The teaser which was released earlier had created a huge impact among the  audience and iam sure this will reflect on the film's release too.Director Srinath Ramalingam  has brought the best from all the technicians including me. I thank the producer Shan, lyricistsG K B, Shrenik Vishwanathan, and play back singers Hari charan , Swetha Mohan , and Velmurugan for their support The techno song  by Velmurugan is the crowd puller..The music album of 'Unakkena venum sollu'  has been on aired today and the release is on 17th September. Now when iam asked 'what do you want'  i reply instantly - A hit' concluded Siva Saravanan.


மிகவும் வித்தியாசமான கதை என்பதாலும், மிக சிறந்த முறையில் படமாக்க பட்ட விதத்தாலும்  டீசர் வெளி ஆன நாள் முதல் எல்லோருடையப் பாராட்டையும் பெற்ற 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தின் இசையும் பரவலாக பாராட்டு பெரும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் படக் குழுவினர். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இளம் இசை அமைப்பாளர்  சிவ சரவணன் பல்வேறு இசை ஆல்பம் தயாரித்தவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் இசை இன்று வெளியானது .இதை பற்றிக்  சிவ சரவணன் கூறும் போது ' இது என் வாழ்வில் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை , எனக்கு ஏழு வயது ஆகும் போது இருந்தே எதிர் நோக்கி வருகிறேன். 'உனக்கென வேணும் சொல்லு ' படத்தின் இயக்குனர் இந்த படத்தில் ஒவ்வொருப் பாடலும் மிகவும் வித்தியாசமாக  இருக்க வேண்டும்,அதிலும் பிண்ணனி இசைதான் படத்துக்கு உயிர் நாடியாகும் என்றார்.பின்னணி இசைக்கு பெயர் போன இளைய ராஜாவை கடவுளாக பூசிப்பவன் நான் , சவாலை ஏற்றுக் கொண்டேன்.இப்பொழுது படம் பார்த்தவர்கள் பாராட்டும் போது  நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போகிறேன்.இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்னிடம் மட்டுமல்ல படத்தின் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்  மற்றும் நடிக நடிகையரிடம் இருந்து மிக சிறந்த முறையில் திறமைகளை வெளி கொண்டு வர  செய்து உள்ளார்.எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ஷானுக்கு என் மனமார்ந்த நன்றி.என் இசைக்கு வடிவம் கொடுத்த பாடலாசிரியர்கள்  ஜி கே பி , ஷெரினிக் விஸ்வநாதன்  அவர்களுக்கும், உயிர் கொடுத்த பிண்ணனி பாடகர்கள் ஹரி சரண், ஸ்வேதா மோகன், ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.  வேல்முருகன் குரலில்  வரும்  'நாலு பாட்டில் சாராயம் '  பாடல் அரங்கில் படம் பார்ப்போர் அனைவரையும்  கவரும். இந்தப் பாடல் டீசர்  மூலம் எல்லோரையும் சென்றடைந்து பிரபலம் ஆனது  எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். அடுத்த மாதம் 17ஆம் தேதி  'உனக்கென்ன வேண்டும் சொல்லு  உலகெங்கும் வெளி வர உள்ளது.இந்த  நிமிடத்தில் கடவுள் என்னிடம் வந்து 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்றால் நான் கேட்பது என் பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்' என்றார் சிவ சரவணன்.

No comments:

Post a Comment