Thursday 27 August 2015

Vinodhan





The "V" factor continues, Director Victor Jayaraj making his debut as a director with 'Vinodhan'  produced by Prabhu  Deva  Studious was searching a perfect pair to play opposite the debutante Hero Varun grand son of the late actor Isari Velan. His search came to an end with Vedhika. This had initiated the 'V' factor in this film. Vedhika was all praise for Director Victor Jayaraj.

 "Victor approached me to narrate this script and when we met for the narration he enacted few scenes to me which were very intriguing.Even before he could conclude i gave my nod since i felt that i could see a new Vedhika in this film . The role is as challenging as Paradesi and Kaviya Thalaivan. I'm glad and I thank my stars that i get performance oriented roles in my career were i can exhibit my acting skills. Vinodhan is basically a psycho emotional dark flick. Victor sir is very demanding when it comes to the matter of performance and now me and Varun will be attending classes on this.This acting class will be for five five days as it will enhance our skills and help us to internalization of character, scene improvements and visualization techniques. I need to definitely say that one of my dream has come true, yes I'm a fan of Prabhu Deva sir and being roped in his production venture is something great in my career.Currently I'm shooting for my Kannada film, i will be joining Vinodhan from the month of September. Pretty excited too' says Vedhika with her ever infectious smile.

வினோதன்

பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான 'வினோதன்' படத்தில் நடிக்கும் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன்  புது முகம் வருணுக்கு இணையாக நடிக்க பல நாட்களாக புதிய இயக்குனர் விக்டர் ஜெயராஜ் கதாநாயகி தேர்வு செய்து கொண்டு இருந்தார். அவரது தேடல் வேதிகாவை தேர்ந்து எடுத்ததன்  மூலம் முடிவடைந்தது. இதைப் பற்றி வேதிகா  கூறியதாவது ' இயக்குனர் விக்டர் என்னிடம் கதை சொல்ல அணுகும் போது , பிரபு தேவா சாருடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன்.கதையை கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, அவ்வளவு நேர்த்தியான,செதுக்க பட்ட கதை. 'பரதேசி' 'காவிய தலைவன்' ஆகிய படங்களின் கதா  பாத்திரத்தை போலவே வித்தியாசமான , மிகவும் சவாலான கதாபாத்திரம்  தான் இந்தப் படத்திலும் என்பதில் எனக்கு.
'வினோதன்' மனோதத்துவத்தின்  பின்னணியில் உருவாகும் ஒரு த்ரில்லர் கதை ஆகும்.இயக்குனர் விக்டர் தன்னுடைய கதா பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்து இருக்கிறார்.அதன் அடிப்படையில் அவர் எனக்கும் , கதா நாயகன் வருனுக்கும் ஒரு நடிப்பு  பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிக -நடிகையருக்கு ஒரு பெரிய வர பிரசாதமாகும்.'வினோதன்' மூலம் என்னுடைய நெடு நாள் கனவு நிறைவு பெற உள்ளது.நான் சிறு வயதில் இருந்தே பிரபு தேவா சாருடைய தீவிர விசிறி.இப்பொழுது ஒரு நடிகையாக  அவருடைய தயாரிப்பில்   நடிக்க போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும் , அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகுத் தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.'வினோதன்' படத்தின் படப்பிடிப்பு செப்டெம்பர் மாதம் துவங்க உள்ளது. ' என்று தன வசீகர புன்னகையை வீசியவாறு  கூறினார் வேதிகா.


No comments:

Post a Comment