Tuesday 3 May 2016

பெஞ்ச் கல்ச்சர் தொட்டதெல்லாம் 'பொன் ' ஆகும்.



செய்யும் வேளையில்  நேர்த்தியாகவும் , தரம் வேண்டும் என்று பிடிவாதமாகவும் இருந்தால் இருந்தால் தொட்டதெல்லாம் 'பொன் ' ஆகும். என்பதில் தீவிர நம்பிக்கை வைத்து இருக்கும்  நிறுவனம் பெஞ்ச் கல்ச்சர்.
 திறமையான இளைஞர்களை திரைக்கு வர உதவும் வகையில் நிறைய குறும்படங்களை தயாரிக்கும் பெஞ்ச் கல்ச்சர் நிறுவனத்தினர் அடுத்ததாக இணையதளத்தில் வெளி இடும் குறும் படத்தின் தலைப்பு ' பொன் '.
ஒரே உச்சரிப்பு  ஆனால் அர்த்தம்  வெவ்வேறு  என்று பல வார்த்தைகள் பல்வேறு மொழிகளில் உண்டு.அப்பேற்பட்ட ஒரு வார்த்தை எப்படி ஒருவனின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை மிக துல்லியமாக படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர்  சந்தோஷ் கிருஷ்ணா.
 பொன் என்கிற வார்த்தைக்கு பெண் என்ற அர்த்தமும் தங்கம் என்ற அர்த்தமும் உண்டு. இந்த  வார்த்தையின் அர்த்தத்தை விபரீதமாக புரிந்துக் கொள்ளும் ஒரு வழிப்பறி திருடனின்  கதைத் தான் 'பொன்'. எண்ணத்தில் இருக்கும் தீவிரம் , படத்தின் தரத்திலும் இருப்பது இயக்குனருக்கு பெருமை சேர்க்கும். இத்தகைய படங்கள் பெஞ்ச் கல்ச்சர்  நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

No comments:

Post a Comment