Tuesday 19 July 2016

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், பள்ளி மாணவ - மாணவிகள் நேரில் சந்திப்பு - இனிப்பு வழங்கி முதலமைச்சர் அறிவுரை


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில், சென்னை சிஷ்யா பள்ளி மாணவ - மாணவிகள் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர், மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சிஷ்யா பள்ளி மாணவ மாணவிகள், கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடும் வகையில் இன்று சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். அப்போது முதலமைச்சர் செல்விஜெயலலிதா தலைமைச்செயலகம் வந்ததை பார்த்த மாணவ மாணவிகள் அனைவரும் உற்சாகம் மிகுதியால், தங்கள் கைகளை அசைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு முதலமைச்சரும் கையசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மாணவ மாணவிகளை தமது அலுவலகத்திற்கு வரவழைத்து, ஒவ்வொரு மாணவ மாணவிக்கும், தனித்தனியாக இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் முதலமைச்சருடன் இணைந்து குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகளுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவுரைகளை வழங்கினார்.முதலமைச்சர் செல்விஜெயலலிதா உடனான இந்த சந்திப்பு பற்றி மகிழ்ச்சி தெரிவித்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில், முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கியதாகவும், இது தங்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment