Wednesday 27 July 2016

நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை!


கேரளாவிலிருந்து தமிழகத்தில் மாவோயிஸ்ட்டுகள்  ஊடுருவுவதாக  வெளியான தகவலையடுத்து   நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.  நவீன கேமராக்களை பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரள வனப்பகுதியில்  மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த இயக்கத்தை சார்ந்த சிலர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் பகுதியில் அந்த இயக்கத்தை சார்ந்த 3 பெண்கள் கைது செய்யபட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாடுகாணி,  பாட்டவயல் போன்ற சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலிசார் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். அதுமட்டுமின்றி ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர். எல்லையோர கிராமங்களில் அமைந்துள்ள 15-க்கும் மேற்பட்ட காவல் லையங்களிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இதனிடையே மாவோயிஸ்ட்டுகளை தேடி வனப்பகுதியிலும் வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment