Monday 25 July 2016

புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி வரும் 'பொது நலன் கருதி' படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியது



'பொது நலன் கருதி' என்ற சொல்லை நாம் அனைவரும் செய்திகளிலும், திரையரங்கில் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும்  விளம்பர படங்களிலும் தான்  கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது அந்த சொல்லை மைய கருத்தாக கொண்டு 'பொதுநலன் கருதி' என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் புதுமுக இயக்குனர் சீயோன். சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இயக்குனர் ராம் பாலாவிடம்  உதவியாளராக பணிபுரிந்த சீயோன், இன்றைய கால இளைஞர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்பதை மிக இயல்பாக இந்த 'பொதுநலன் கருதி' படத்தின் மூலம் சொல்ல இருக்கிறார். நடிகர் கருணாகரன், 'தங்கமகன்' படப்புகழ் ஆதித் அருண்,  'கதை,  திரைக்கதை, வசனம், இயக்கம்' படப்புகழ் சந்தோஷ், மலையாள நடிகை  அனு சித்தாரா (ஹாப்பி வெட்டிங்) மற்றும்  லீஷா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த 'பொது நலன் கருதி' திரைப்படத்தில் யோக் ஜாப்பீ, அஷ்மித்தா ('மஸ்காரா போட்டு மயக்குறுயே..' பாடல் புகழ்), இமான் அண்ணாச்சி, 'வழக்கு எண் 18/9' படப்புகழ் முத்துராமன், 'சூப்பர் குட்' சுப்பிரமணி, 'சுப்ரமணியப்புரம்'  ராஜா  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடிக்கின்றனர். இப்படி வலுவான திறமையாளர்களை உள்ளடக்கிய  'பொது நலன் கருதி' திரைப்படத்தின் படப்பிடிப்பானது, இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

"மூன்று வெவ்வேறு பிரிவுகளை சார்ந்த இளைஞர்கள், தங்களின் பிழைப்புக்காக சென்னை வருகின்றனர். அவர்கள் தங்களின் வாழ்க்கையில் வெற்றி கண்டார்களா, இல்லையா என்பது தான் எங்கள் 'பொது நலன் கருதி' படத்தின் ஒரு வரிக்கதை.  இந்த படத்தில் சமுதாயத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை நாங்கள் உள்ளடக்கி இருக்கிறோம். ஆனால் வெறும் ஒரு சீரியஸ் படமாக மட்டுமில்லாமல், ரசிகர்களை என்டர்டைன் பண்ணக்கூடிய அனைத்து அம்சங்களும் இந்த 'பொது நலன் கருதி' படத்தில் இருக்கிறது..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'பொது நலன் கருதி' படத்தின் இயக்குனர் சீயோன்.

No comments:

Post a Comment